"யாருக்கு எந்தத் தொகுதி?" - அதிமுக கூட்டணிப் பட்டியல் வெளியீடு: பாஜக, பாமக, அமமுக மோதுமிடம் எவை? முழு விவரம்!

அதிமுக கூட்டணியில் பாஜக (27), பாமக (18), அமமுக (11) உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அதிகாரப்பூர்வப் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

M

எழுதியவர்

1 மாதங்களுக்கு முன்
"யாருக்கு எந்தத் தொகுதி?" - அதிமுக கூட்டணிப் பட்டியல் வெளியீடு: பாஜக, பாமக, அமமுக மோதுமிடம் எவை? முழு விவரம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அதிகாரப்பூர்வப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், ஜான் பாண்டியன் மற்றும் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி முறைப்படி அறிவித்தார். அதன் முழு விவரம்

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்
  1. மயிலாப்பூர்
  2. தளி
  3. மொடக்குறிச்சி
  4. உதகமண்டலம்
  5. அவினாசி (தனி)
  6. திருப்பூர் தெற்கு
  7. கோவை வடக்கு
  8. கந்தர்வக்கோட்டை (தனி)
  9. புதுக்கோட்டை
  10. திருப்பத்தூர்
  11. மதுரை தெற்கு
  12. சாத்தூர்
  13. திருச்செந்தூர்
  14. வாசுதேவநல்லூர் (தனி)
  15. ராதாபுரம்
  16. நாகர்கோவில்
  17. விளவங்கோடு
  18. ஆவடி
  19. திருவண்ணாமலை
  20. தஞ்சாவூர்
  21. திருவாரூர்
  22. அறந்தாங்கி
  23. மானாமதுரை (தனி)
  24. ராமநாதபுரம்
  25. குளச்சல்
  26. பத்மநாபபுரம்
  27. ராசிபுரம் (தனி).
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்
  1. சேலம் மேற்கு
  2. சேலம் வடக்கு
  3. தருமபுரி
  4. பென்னாகரம்
  5. விக்கிரவாண்டி
  6. சோளிங்கர்
  7. திருப்போரூர்
  8. உத்திரமேரூர்
  9. ஜெயங்கொண்டம்
  10. விருதாச்சலம்
  11. மயிலாடுதுறை
  12. செஞ்சி
  13. போளூர்
  14. கீழ்வேளூர் (தனி)
  15. ரிஷிவந்தியம்
  16. காட்டுமன்னார்கோயில் (தனி)
  17. பெரம்பூர்
  18. அம்பத்தூர்.
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்
  1. பெரியகுளம் (தனி)
  2. மன்னார்குடி
  3. திருவையாறு
  4. காரைக்குடி
  5. திருப்பத்தூர்
  6. நாங்குநேரி
  7. ஒட்டபிடாரம் (தனி)
  8. திருச்சி மேற்கு
  9. சைதாப்பேட்டை
  10. பூந்தமல்லி (தனி)
  11. மடத்துகுளம்
தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள்
  1. ஒட்டன்சத்திரம்
  2. ஈரோடு மேற்கு
  3. ராணிப்பேட்டை
  4. கிள்ளியூர்
  5. கும்பகோணம்
ஐஜேகே போட்டியிடும் 2 தொகுதிகள்
  1. பல்லாவரம்
  2. குன்னம்
பிற கட்சிகள்:

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு (தமமுக) ராஜபாளையம் தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...