மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் ஏற்பாடு

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2 மணி நேரத்திற்கு முன்
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் ஏற்பாடு

மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, வாக்கு எண்ணிக்கை அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்கு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் மற்றும் EVM வாக்குகள் தனித்தனி பகுதிகளில், தனித்தனி குழுக்களால் ஒரே நேரத்தில் கண்காணிப்புடன் எண்ணப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இம்மையங்களில் பகிர்ந்து எண்ணப்படும். அதிகபட்சமாக மதுரையில் 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா 4 மையங்கள் என்று மொத்தமாக 62 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக இறுதிசுற்றுகளுக்கான எண்ணிக்கை நடைபெறும் முன்னதாக தபால் வாக்குகள் முழுமையாக கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இறுதி சுற்று EVM வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணும் பணிக்காக ஒவ்வொரு மேசைக்கும் சுமார் 500 வாக்குகள் என்ற அடிப்படையில் பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு அதிகாரிகள், பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒழுங்குமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...