தீவுகளை இணைக்கும் நீர் விமானம்: லட்சத்தீவில் தொடக்கம்

இந்தியாவில் முதல் முறையாக வணிக ரீதியிலான பயணிகள் நீர் விமான சேவை லட்சத்தீவிலிருந்து விரைவில் அறிமுகமாக உள்ளது.

1 மணி நேரத்திற்கு முன்
தீவுகளை இணைக்கும் நீர் விமானம்: லட்சத்தீவில் தொடக்கம்

இதற்கான முன்னெடுப்புகளை ஸ்கைஹாப் ஏவி யேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சேவைக்கான ஆபரேட்டர் சான்றிதழை டைரக்டரேட் ஜெனரல் ஆப் சிவில் ஏவி யேஷன் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இந்தியாவில் நீர் வழியாக பயணிகள் விமான சேவையை வழங்கும் முக்கிய முயற்சி நடைமுறைக்கு வர உள்ளது.

முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் கங்கையில் நீர் விமானம் பறத்தலும் இறங்கலும் தொடர்பான சோதனைகளை நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன் அடிப்படையில் தற்போது லட்சத்தீவில் சேவையை தொடங்க அனுமதி கிடைத்துள்ளது.

திட்டத்தின் முதல் கட்டமாக, லட்சத்தீவின் ஐந்து தீவுகளை இணைக்கும் வகையில் இந்த சேவை இயக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 19 பயணிகள் பயணம் செய்யக்கூடிய திறன் கொண்ட இந்த நீர் விமானம், தீவுகளுக்கிடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்தீவில் விமான நிலைய வசதிகள் குறைவாக உள்ள நிலையில், தீவுகளுக்கு இடையேயான பயணம் தற்போது நேரம் எடுத்துக்கொள்ளும் மற்றும் சிரமமானதாக உள்ளது. இந்த நீர் விமான சேவை அறிமுகமானால், பயண நேரம் கணிசமாக குறையும் மட்டுமல்லாமல், சுற்றுலா வளர்ச்சிக்கும் ஊக்கமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...