அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: வரலாறு காணாத சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 92.18 ரூபாய் என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: வரலாறு காணாத சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!
சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு (இது Gemini செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்)

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (புதன்கிழமை) வர்த்தகத் தொடக்கத்திலேயே 69 பைசா சரிந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 92.18 ரூபாய் என்ற வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் சூழலால், பிரெண்ட் கச்சா (Brent Crude) எண்ணெய் விலை ஒரு பேரல் 82 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதால், அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக 92.05 ரூபாயாகத் தொடங்கிய வர்த்தகம், அடுத்த சில நிமிடங்களிலேயே 92.18 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...