கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3 வரை உயர்வு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹3.14 அதிகரித்து, முன்பு ₹100.80-க்கு விற்பனையான பெட்ரோல் தற்போது ₹103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3 மணி நேரத்திற்கு முன்
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3 வரை உயர்வு

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹3 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹3.14 அதிகரித்து, முன்பு ₹100.80-க்கு விற்பனையான பெட்ரோல் தற்போது ₹103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3.11 உயர்த்தப்பட்டதால், ஒரு லிட்டர் டீசல் ₹95.50-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இந்த விலை உயர்விற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றம், உற்பத்தி மந்தநிலை மற்றும் உலகளாவிய தேவையின் அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் விலையை பாதித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே சில நாடுகளில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இந்தியாவிலும் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி விடுத்த செய்தி குறிப்பில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றியதை போன்று தற்போதும் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் எரிபொருள் சேமிப்பு காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு எரிபொருள் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும். இது நம் தேச பக்திக்கு சிறந்த பாங்களிப்பாக இருக்கும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் லாரி வாடகைகள் உயரும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...