மத்திய அரசின் முக்கிய முடிவு: நிதி ஆயோக்கில் இரு புதிய முழுநேர உறுப்பினர்கள்

நாட்டின் முக்கிய கொள்கை ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கில் (NITI Aayog) புதிய முழுநேர உறுப்பினர்களாக பால சுப்ரமணியம் மற்றும் ஜோரம் அனியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2 மணி நேரத்திற்கு முன்
மத்திய அரசின் முக்கிய முடிவு: நிதி ஆயோக்கில் இரு புதிய முழுநேர உறுப்பினர்கள்

நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் முக்கியமான சிந்தனைக் குழுவாக செயல்பட்டு, வளர்ச்சி திட்டங்கள், கொள்கை வடிவமைப்பு மற்றும் மாநிலங்களுடன் ஒத்துழைப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வமைப்பின் தலைவராக இந்திய பிரதமர் பதவி வகித்து வருகிறார்.

நிதி ஆயோக் அமைப்பில் பிரதமரின் கீழ், அசோக் குமார் லஹிரி துணைத்தலைவராகவும், ராஜீவ் கௌபா, கே.வி. ராஜு, கோபர்த்தன் தாஸ், அபய் தரந்திக்கர் மற்றும் எஸ்.எம். ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதிதாக ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் ஜோரம் அனியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பால சுப்ரமணியம், மிஷன் கர்மயோகி திட்டத்தின் கீழ் செயல்படும் திறன் மேம்பாட்டு ஆணையத்தில் மனிதவள உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் 50 ஆண்டுகள் பொது வாழ்க்கையை மையமாகக் கொண்டு “Power Within: The Leadership Legacy of Narendra Modi” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். மேலும் பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

மேலும் ஜோரம் அனியா, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நிஷி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். அச்சமூகத்தில் முதல் முறையாக முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர். இலக்கியம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

நிதி ஆயோக் அமைப்பு, நாட்டின் நிலையான வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய தளமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...