இதன் தாக்கம் அன்றாட தேவையான எல்பிஜி கேஸ் சிலிண்டர்களிலும் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசு நிறுவனங்கள் விநியோக முறையை வெளிப்படையானதும் பாதுகாப்பானதுமானதாக மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
2026 மே 1 முதல் எல்பிஜி முன்பதிவு மற்றும் விநியோக முறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விலையிலும் மாற்றம் வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சில புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலையை உருவாக்குகிறது.
DAC கட்டாயம்
இதுவரை சில பகுதிகளில் OTP இல்லாமல் சிலிண்டர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி OTP (Delivery Authentication Code-DAC) கட்டாயமாக்கப்படலாம். சிலிண்டர் டெலிவரி செய்யும் போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த குறியீட்டை வழங்கிய பின்னரே விநியோகம் நிறைவு பெறும். இதன் காரணமாக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் சரியாக இல்லையெனில், சிலிண்டர் பெறுவதில் சிரமம் ஏற்படும். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் முகவரியை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இ -கேய்சி (e-KYC) மற்றும் ஆதார் சரிபார்ப்பு
மத்திய அரசு e-KYC செயல்முறையை வலியுறுத்தியுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே e-KYC முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. மேலும் சரியான நேரத்தில் எல்பிஜி மானியம் பெறவும், சேவை தடையின்றி கிடைக்கவும் e-KYC செயல்முறையை நிறைவு செய்வது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் முன்பதிவு முறைகள்
வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டரை முன்பதிவு செய்ய பல டிஜிட்டல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மிஸ் கால் சேவை, SMS (LPG / Refill)
மொபைல் செயலி / இணையதளம், WhatsApp மூலம் முன்பதிவு போன்றவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த சேவைகள் 24/7 பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய தேவையான விவரங்கள்
ஆன்லைன் முன்பதிவிற்கு ஆதார் எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், LPG ID, e-KYC நிலை இவை அனைத்தும் சரியாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
விநியோகக் காலத்தில் மாற்றம்
தற்போது 21- 25 நாட்களாக உள்ள முன்பதிவு முடக்க காலத்தில் மாற்றம் வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தக் கால இடைவெளிக்கு முன் புக் செய்ய முயற்சித்தால், சிஸ்டம் தானாகவே அதைத் தடுத்துவிடும்.
முகவரி புதுப்பிக்காதவர்களுக்கு சிக்கல்
வீடு மாறியவர்கள் புதிய முகவரியை புதுப்பிக்காவிட்டால், முன்பதிவு மற்றும் விநியோகத்தில் தடைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய LPG விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் விவரங்களை புதுப்பித்து, e-KYC முடித்து, புதிய நடைமுறைகளுக்கு தயாராக இருப்பது அவசியம்.
