வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் எளிய சேவை: எல்ஐசி டிஜிட்டல் முயற்சி

எல்ஐசி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீட்டு முகவர்களுக்கு எளிமையான மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்கில் இரண்டு புதிய மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 மாதங்களுக்கு முன்
வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் எளிய சேவை: எல்ஐசி டிஜிட்டல் முயற்சி

இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி), வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீட்டு முகவர்களுக்கு எளிமையான மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்கில் இரண்டு புதிய மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘மை எல்ஐசி’ (My LIC) மற்றும் ‘சூப்பர் சேல்ஸ் ஜாதி’ (Super Sales Jathi) என்ற இந்த செயலிகள், மும்பையில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதி சேவைகள் துறை செயலர் M. நகராஜு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எல்ஐசி மேலாண்மை இயக்குநர் ஆர். துரைசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு ‘மை எல்ஐசி’ செயலி

சுமார் 26 கோடி காப்பீட்டு பாலிசிகளை கொண்டுள்ள எல்ஐசி, அலுவலகங்களுக்கு நேரில் வராமல் வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெறும் வகையில் ‘மை எல்ஐசி’ செயலியை உருவாக்கியுள்ளது.

இந்த செயலியின் மூலம் அனைத்து காப்பீட்டு திட்டங்களையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம், தவணை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம், கலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கலாம், புதிய காப்பீட்டு திட்டங்களை நேரடியாக வாங்கலாம்.

முகவர்களுக்கு ‘சூப்பர் சேல்ஸ் ஜாதி’

எல்ஐசி முகவர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகளின் பணிகளை எளிமையாக்கவும், திறனை உயர்த்தவும் ‘சூப்பர் சேல்ஸ் ஜாதி’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு திட்டங்களை விளக்கும் டிஜிட்டல் கருவிகள், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் தேவைகளை பகுப்பாய்வு செய்து சரியான ஆலோசனை வழங்குதல், விற்பனை இலக்குகளை நேரடியாக கண்காணிக்கும் வசதி, பயன்பாட்டு வசதி போன்றவற்றையும் பெறலாம்.

டிஜிட்டல் மாற்றத்தில் முக்கிய கட்டம்

இந்த புதிய செயலிகள் மூலம் எல்ஐசி, தனது டிஜிட்டல் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு விரைவான, திறமையான சேவையை வழங்கும் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...