டெல்லியில் நாளை இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) நாளை டெல்லியில் கையெழுத்தாக உள்ளது

1 மணி நேரத்திற்கு முன்
டெல்லியில் நாளை இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

இந்த ஒப்பந்தம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்கலே முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் மூலம், நியூசிலாந்து சந்தையில் இந்திய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை கூடுதல் வரியின்றி விற்க வாய்ப்பு கிடைக்கும். மேலும், நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு வழங்கப்படும் என்றும், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நியூசிலாந்து பொருட்களுக்கு 95% வரை வரிச்சலுகைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாய துறைகளில் பரஸ்பர முதலீடுகளை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்தியாவின் ஆடை, மருத்துவ பொருட்கள், பொறியியல் சாதனங்களுக்கு மற்றும் நியூசுலாந்தின் பொருட்களுக்கும் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 5 ஆயிரம் நியூசிலாந்து விசா வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவுடன் இணைவது நியூசிலாந்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் மக்களுக்கும் பெரும் பொருளாதார நன்மைகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...