உலக பொருளாதார பட்டியல்: இந்தியா 6வது இடத்துக்கு சரிவு

2026ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார பட்டியலில், இந்தியா ஒரு இடம் சரிந்து 6வது இடத்தில் உள்ளது.

1 மாதங்களுக்கு முன்
உலக பொருளாதார பட்டியல்: இந்தியா 6வது இடத்துக்கு சரிவு

சர்வதேச அளவில் நாடுகளின் பொருளாதார வலிமையை அளவிடும் வருடாந்திர பட்டியலை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில், இந்தியா ஒரு இடம் சரிந்து 6வது இடத்தில் உள்ளது.

நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), நாணய மதிப்பு, உலக வர்த்தகத்தில் கொண்டுள்ள பங்கு மற்றும் மக்களின் வாங்கும் திறன் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.

இந்த பட்டியலில், அமெரிக்கா 32.38 டிரில்லியன் டாலர் GDPயுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனா 20.85 டிரில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக, ஜெர்மனி மற்றும் ஜப்பான் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளன. இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

4.15 டிரில்லியன் டாலர் GDPயுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த இந்தியா, இவ்வாண்டு ஒரு இடம் பின்னுக்குச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரான்ஸ் இடம் பெற்றுள்ளது.

உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மாற்றங்கள் மற்றும் நாணய மதிப்பில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள் போன்ற காரணிகள் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...