ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கிய இபிஎஃப்ஓ

ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வூதிய வழங்கல் ஆணைகள் 70 பேருக்கு வழங்கப்பட்டன

1 நாட்களுக்கு முன்
ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கிய இபிஎஃப்ஓ

ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தை பெறுவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பிரயாஸ்” திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வூதிய வழங்கல் ஆணைகள் 70 பேருக்கு வழங்கப்பட்டன. இந்த முயற்சியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) சென்னை மண்டலம் செயல்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் “பிரயாஸ்” திட்டம், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதிய சேவையை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஓய்வு பெற்ற பின்னரும் மாதக்கணக்கில் அலுவலகங்களை சுற்றி வர வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிமுடிப்பு காரணமாக ஓய்வு பெற்ற 70 ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேவி பிரசாத் பட்டாச்சார்யா ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார். மேலும், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் நீரஜ் சிங் முன்னிலை வகித்தார்.

இந்நிலையில், வருங்காலத்தில் இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தி அதிகமான ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதிய வழங்கல் நடைமுறையை கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...