DGCAவின்‌ புதிய விதிகள்: 14 நாளில் ரீபண்ட் தர உத்தரவு!

விமான பயணிகளின் புகாரைத் தொடர்ந்து, ரீபண்ட் விதிமுறைகளை மாற்றிய DGCA, 14 நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் மற்றும் பெயர்த் திருத்தங்களுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
DGCAவின்‌ புதிய விதிகள்: 14 நாளில் ரீபண்ட் தர உத்தரவு!

விமான பயணிகளிடம் இருந்து அதிகரித்துவரும் புகார்களைத் தொடர்ந்து, ரீபண்ட் மற்றும் டிக்கெட் திருத்த விதிகளில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இனி, டிக்கெட் வாங்கிய 24 மணி நேரத்திற்குள் பெயரில் திருத்தம் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயண ரத்து மற்றும் ரீபண்ட் விஷயங்களில், ஏஜெண்டுகள் மூலம் புக் செய்திருந்தாலும், 14 நாட்களுக்குள் பயணிகளுக்குப் பணத்தைத் திருப்பித் தரும் பொறுப்பு அந்தந்த விமான நிறுவனங்களுக்கே உரியது என DGCA தெளிவுபடுத்தியுள்ளது.

மருத்துவ அவசர காலங்களில் டிக்கெட் ரத்து செய்தால் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் பயணிகளுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...