Gold Rate: தங்கம் விலையில் அதிர்ச்சி! நல்லாதானே போய்கிட்டிருந்தது! திடீர்னு ஏன் இப்படி?

Gold Rate: தங்கம் விலையில் அதிர்ச்சி!

3 மாதங்களுக்கு முன்
Gold Rate: தங்கம் விலையில் அதிர்ச்சி! நல்லாதானே போய்கிட்டிருந்தது! திடீர்னு ஏன் இப்படி?

சென்னை: சென்னையில் பிப்ரவரி 3-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,12,240 -க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,030-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ 280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,80,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,320-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 29-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,34,400- க்கு விற்பனையானது. சென்னையில் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,12,240 -க்கும், கிராமுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,030-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ 280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,80,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...