வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: சென்னையில் ரூ.3,237 – வியாபாரிகள் கவலை

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை மே 1ஆம் தேதி முதல் கணிசமாக உயர்ந்துள்ளது.

1 மணி நேரத்திற்கு முன்
வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: சென்னையில் ரூ.3,237 – வியாபாரிகள் கவலை

மேற்காசிய போரினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை முன்னிட்டு, எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்ட இந்த உயர்வு, சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

மத்திய அரசின் அனுமதிப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதன் அடிப்படையில், புதிய திருத்தப்பட்ட விலைகள் அமலுக்கு வந்துள்ளன.

புதிய விலைகளின்படி, டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை சுமார் ரூ.993 உயர்ந்து ரூ.3,071.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னையில் விலை ரூ.990.50 அதிகரித்து தற்போது ரூ.3,237க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், வீட்டு பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வு வணிகத்துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தற்போது நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு சூழலில், ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் போன்ற சிறு தொழில்கள் ஏற்கனவே செலவுச் சுமையை சந்தித்து வரும் நிலையில், இந்த உயர்வு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் சாதாரண மக்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பியிருக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...