ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறார் டிம் குக்

உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி (CEO) டிம் குக் தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 மாதங்களுக்கு முன்
ஆப்பிள்  சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறார் டிம் குக்

2011ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் சிஇஓ பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்த பொறுப்பை டிம் குக் ஏற்றார். அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் வருவாய் மற்றும் லாபத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது. மேலும், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ல் இருந்து ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தி வரும் அவர், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாகியாக ஹார்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவின் துணைத் தலைவர் ஜான் டெர்னஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிஇஓ பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜான் டெர்னஸ் 2001ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் பல முக்கிய ஹார்ட்வேர் தயாரிப்புகளின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர் என அறியப்படுகிறார்.

புதிய தலைமை மாற்றம் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...