சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வீடு தேடி வழங்கும் இந்த சேவை, தற்போது டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சேவையை விரைவில் சென்னை , ஹைதெராபாத் , கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், அதேபோல் கொச்சி , மைசூர் போன்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அமேசான் நவ் மூலம் மளிகைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ய முடியும். குறைந்த நேரத்தில் பொருட்கள் வீட்டிற்கு கிடைக்கும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விரைவு டெலிவரி சந்தையில் ஏற்கனவே Instamart, Blinkit போன்ற நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. இந்நிலையில், அமேசான்-னின் இந்த நடவடிக்கை போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமேசான் நிறுவனம் தனது குறைந்த நேர டெலிவரி சேவையான அமேசான் நவ்-வை இந்தியாவில் மேலும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
மேலும், அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை சிறப்பு சலுகைகளுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
