இந்தியாவில் அமேசான் நிறுவனம் ரூ.2,800 கோடி முதலீடு: கட்டமைப்பு மற்றும் ஊழியர் நலனில் விரிவாக்க திட்டம்  

அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனம் அமேசான் , இந்தியாவில் தனது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரூ.2,800 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது

1 மாதங்களுக்கு முன்
இந்தியாவில் அமேசான் நிறுவனம் ரூ.2,800 கோடி முதலீடு: கட்டமைப்பு மற்றும் ஊழியர் நலனில் விரிவாக்க திட்டம்  

இந்த முதலீட்டின் மூலம் நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன், ஊழியர்களின் நலனையும் உயர்த்தும் நோக்கத்தை மையப்படுத்தி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய முதலீடு

அமேசான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொத்தம் 35 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் இலக்கின் ஒரு பகுதியாகவே இந்த புதிய முதலீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை திட்டம்

இந்த ரூ.2,800 கோடி முதலீடு முக்கியமாக விநியோக மையங்களை விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு வேகமான சேவையை வழங்கும் வகையில் இ-காமர்ஸ் கட்டமைப்பை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். மேலும், ‘குவிக் காமர்ஸ்’ சேவைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கும் இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் நலன்

ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்த முதலீட்டின் ஒரு பகுதி செலவிடப்படும். குறிப்பாக, ‘ஆஷ்ரே’ போன்ற திட்டங்கள் மூலம் சுகாதாரம், நிதி பாதுகாப்பு மற்றும் விபத்து காப்பீடு வசதிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து அமேசான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிராந்திய செயல்பாட்டு துணைத் தலைவர் கூறுகையில், “2013ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்படத் தொடங்கியதிலிருந்து, நாடு முழுவதும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான விநியோக வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். எங்கள் வளர்ச்சியின் மையமாக எப்போதும் ஊழியர்களின் நலனே இருக்கும். இந்த புதிய முதலீடு தொழில்நுட்ப மேம்பாட்டையும், வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான சேவையையும் உறுதி செய்யும்,” என்று கூறியிருக்கிறார்.

கட்டமைப்பு விரிவாக்கம்

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அமேசானின் விநியோக வலையமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. 2015ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய கட்டமைப்பு விரிவாக்கத்தை மேலும் மேம்படுத்துவதே இந்த முதலீட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த புதிய முதலீடு மூலம் டிஜிட்டல் மாற்றம், உற்பத்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு விரிவாக்கம் ஆகிய துறைகளிலும் அமேசான் அதிக கவனம் செலுத்த உள்ளது. மேலும், விநியோக பணியாளர்களுக்கான சுகாதார சேவைகள் மற்றும் காப்பீட்டு பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...