"தமிழகத்திலேயே விசாரணை நடத்துங்கள்": சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கடிதம்!
சட்டமன்றத் தேர்தல் பணிகள் இருப்பதால் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையைத் தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.