தமிழகத்தில் ஒருபுறம் அனல் காற்று, மறுபுறம் கனமழை: 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் மே 4 வரை வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் அதேவேளையில், வளிமண்டல சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.