சேலத்தில் குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த எடப்பாடி பழனிசாமி: “வெற்றி மீது 100% நம்பிக்கை உள்ளது” எனப் பேட்டி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த பின், தேர்தல் வெற்றியில் தமக்கு 100% நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.