நம்பிக்கை பற்றி
நம்பிக்கை இணையதளம் , தரமான செய்திகளை துல்லியமாகவும் நடுநிலை தவறாமலும் வழங்கும் ஒரு நம்பகமான செய்தி தளமாகும். கடந்த 25 ஆண்டுகளாக மலேசிய தமிழர்களின் நம்பிக்கையை பெற்று மாத இதழாகப் பயணித்த நம்பிக்கை , காலத்திற்கேற்ப, நவம்பர் 2021 முதல் டிஜிட்டல் தளமாகப் பரிணமித்துள்ளது. தற்போது அன்றாடச் செய்திகளையும் , உடனுக்குடன் வைரலாகும் தகவல்களையும் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த தளம் மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் விரிவடைந்துள்ளது.
எங்கள் நோக்கம்
சிறந்த கட்டுரைகள், காணொலிகள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகள் வழியாக எமது தமிழ் வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை ஆதாரப்பூர்வமாக அளித்து, அவர்களை மகிழ்விக்கவும் ஊக்கப்படுத்தவும் விரும்புகிறோம். இதன் மூலம் விழிப்புணர்வு மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.
எமது இலக்கு
மலேசியாவின் மிகவும் நம்பகமான மற்றும் முழுமையான தமிழ் செய்தித் தளமாக விளங்கிய நம்பிக்கை, இப்பொழுது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் வாழ் தமிழர்களின் நம்பிக்கையாய் திகழ்வதே எமது இலக்கு. உள்நாடு மற்றும் உலகளாவிய செய்திகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, வாசகர்களுக்குச் சிறந்த செய்திகளை தரவுகளுடன் உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே எமது கனவு.
எங்கள் மதிப்புகள்
- ✓உடனுக்குடன் செய்திகள்
- ✓விரிவான கட்டுரைகள்
- ✓பல்லூடகத் தகவல் (Multimedia) செய்திகள்
- ✓எளிமையான வடிவமைப்பு
எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
பொதுவான விசாரணைகள்
contact@nambikkai.com
முகவரி
சென்னை, தமிழ்நாடு, இந்தியா